Monday, June 11, 2012

இயங்கு தளம் (Operating System)

உங்கள் கணினியின் உயிர் நாடி இயங்கு தளம் என்று அழைக்கப்படும் (ஆபரேடிங் சிஸ்டம்) ஆகும். உலகில் மிகவும் உபயோகப்படுதப்ப்படும் இயங்கு தளம் விண்டோஸ் (Windows) ஆகும்.

வேறு எந்த இயங்கு தளங்கள் உள்ளன?

  1. மாக் (MAC)
  2. லினக்ஸ் (Linux)
  3. யுனிக்ஸ் (UNIX )
  4. சோலாரிஸ் (SOLARIS )
  5.  அன்றோய்ட் (ANDROID)
இன்னும் பல. இவற்றில் உலகில் மிக அதிகமாக உபயோகப்படுத்தக்கூடிய இயங்கு தளம் விண்டோஸ். அதன் பிறகு மாக் OS. MAC OS ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்தது.

விண்டோஸ் மற்றும் மாக் அந்தந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது . ஆனால் லினக்ஸ் மென்பொருள் open source என்று சொல்லக்கூடிய திறந்த மூல மென்பொருள் ஆகும். அது என்னவென்றால் இதன் முக்கிய மென்பொருள்கள் யார் வேண்டுமானாலும் தடையின்றி உபயோகித்து அதற்கான மென்பொருள்களை உருவாக்கலாம். GNU GPL Licencse  என்று சொல்லப்படும் இலவச மென்பொருள் ஆகும்.

லைனஸ் த்ரவல்டிஸ் என்ற இளைஞர் தான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கம்ப்யூட்டர் வாங்க மிகவும் கஷ்டப்பட்டார். இயங்கு தளங்கள் பெறுவதற்காக எதற்கு செலவு செய்ய வேண்டும் என்று கருதினார். இதன் விளைவாக அவர் ஒரு இயங்குதளத்தை உருவாக்கினார், அதற்கு லினக்ஸ் என்று பெயரிட்டார்.

இன்று லினக்ஸ் பலரால் உருவாக்கப்பட்டும், உபயோகிக்கப்பட்டும் வருகிறது. ஒரு காலத்தில் விண்டோஸ் மற்றும் மாக் இயங்குதலங்களுக்காகவே மட்டும் மென்பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவனங்கள் இன்று லினக்ஸ் க்கும் மென்பொருள்கள் செய்கின்றனர்.

இப்பொழுது நாம் லினக்ஸ் இயங்கு தளம் மற்றும் அதன் பல வேறு சார் இயங்குதளங்களை ப.

நான் முன்பே சொன்னது போல் லினக்ஸ் இயங்குதளங்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இலவசமாக வரும் எதற்குமே மனித சமுதாயத்தில் மதிப்பு குறைவு தான். ஆனால் எல்லோரும் பயன் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உருவாக்கப்படுவது இந்த லினக்ஸ் இயங்குதளம். இதை சார்ந்து ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட இயங்குதளங்கள் இன்று உள்ளன. அவற்றில் சிலவற்றை பாப்போம்.

  • உபுன்டு (UBUNTU)
  • லினக்ஸ் மினட்  (LINUX MINT ) இது உபுண்டு சார்ந்தது
  • பெடோரா (FEDORA)
இந்த இயங்கு தளங்கள் தரவிறக்கம் (download ) செய்யவும் இவற்றை பற்றிய விஷயங்கள் அறியவும் கீழ்க்கண்ட இனைய தளம் மிகவும் உபயோகமானதாகும்.

http://distrowatch.com/

லினக்ஸ் இணையதளத்தின் விசேஷம் என்னவென்றால் நீங்கள் இந்த இயங்கு தளங்களை டவுன்லோட் செய்து ஒரு CD  யில் ஏற்றுமதி செய்து இதை உங்கள் கம்ப்யுட்டரில் எற்றாமலேயே  CD யிலுரிந்தே இயக்க முடியும். மேலும் இதை ஒரு pen டிரைவிளிருந்தும் கூட இயக்க முடியும்.

இந்த இணைய தளங்களின் படங்கள் சில கீழே.

லினக்ஸ் மின்ட்



 உபுண்டு




பெடோரா






இனி வரும் நாட்களில் இவற்றின் சிறப்புகள் மற்றும் குறைகளை பாப்போம்.

அது வரை உங்களிடம் நன்றி கூறி விடை பெறுகிறேன் .













No comments:

Post a Comment